×

ஆதிநாக அருளீஸ்வரர் கோயிலில் நாளை திருக்கல்யாணம்

 

மல்லசமுத்திரம், மே 4: வையப்பமலை அடுத்த மணலி ஜேடர்பாளையத்தில் உள்ள ஆதிநாக அருளீஸ்வரர் கோயிலில், நாளை (5ம் தேதி) சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதனையொட்டி, நேற்று விநாயகர் கோயிலில் இருந்து சீர்வரிசை அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து நாளை காலை விநாயகர் வழிபாடு, புண்யாகம், பஞ்சகாவியம், கலச பூஜை மற்றும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

The post ஆதிநாக அருளீஸ்வரர் கோயிலில் நாளை திருக்கல்யாணம் appeared first on Dinakaran.

Tags : Thirukalyanam ,Adinaga Aruleeswarar temple ,Manali Jaderpalayam ,Vaiyappamalai ,
× RELATED உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி –...